டெல்லியில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு ரூ.5,500 மானியம் - போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட்

0 2477
டெல்லியில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு ரூ.5,500 மானியம் - போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட்

டெல்லியில் இ-சைக்கிள் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுமென அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லட் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு இ - சைக்கிள் வாங்கும் முதல் பத்தாயிரம் பேருக்கு 5 ஆயிரத்து 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் ஆயிரம் பேருக்கு கூடுதல் மானியமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வர்த்தக பயன்பாட்டிற்கான சரக்கு இ - சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மானியம் முன்பு தனிப்பட்ட முறையில் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது, நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments