ரத்த வெள்ளத்தில் துடித்த ரஷ்ய வீரரை சுட்டுக்கொன்ற உக்ரைன் வீரர்..!

0 3972
ரத்த வெள்ளத்தில் துடித்த ரஷ்ய வீரரை, உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற காணொளி இணையத்தில் வெளியானது.

ரத்த வெள்ளத்தில் துடித்த ரஷ்ய வீரரை, உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற காணொளி இணையத்தில் வெளியானது.

போரில் படுகாயமடைந்து, சுவாசிக்க சிரமப்பட்டபடி சாலையோரம் துடித்துக்கொண்டிருந்த ரஷ்ய வீரரை உக்ரைன் வீரர் ஒருவர் 2 முறை துப்பாக்கியால் சுட்டார். இருந்தபோதும், ரஷ்ய வீரரின் உடலில் லேசான அசைவு தென்பட்டதால் 3வது முறை சுட்டு அவரை கொன்றார்.

அருகில் ஒரு ரஷ்ய ராணுவ வாகனமும், இரு ரஷ்ய வீரர்களின் சடலங்களும் காணப்பட்டன. அதில் ஒரு வீரர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், பின்னந்தலையில் சுட்டு கொல்லப்பட்டிருந்தார்.

ரஷ்ய வீரர்கள் கொத்து கொத்தாக உக்ரைனியர்களை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் பூச்சா நகர் அருகே உள்ள டிமிட்ரிவ்கா (Dmytrivka) கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments