கோரக்பூர் ஆலயத்தைத் தகர்க்கவும் யோகி ஆதித்யநாத்தை கொல்லப் போவதாகவும் மிரட்டல்.!

0 1744

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆலயத்தை குண்டு வவைத்து தகர்க்கப் போவதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப் போவதாகவும் தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. கோவிலைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் வளாகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.இதேபோல் லக்னோவில் உள்ள விதான் சபா கட்டடம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றையும் குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments