மின்சார ரெயில் மோதி பீஸ் பீஸான மாணவர்கள்.. இன்ஸ்டாரீல்ஸ் விபரீதம்..!

0 5532

செங்கல்பட்டு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் நின்று கெத்து காட்டுவதாக எண்ணி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் மின்சார ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியாகி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்த மோகன், பிரகாஷ் ஆகிய இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் , தங்கள் கூட்டாளியான அசோக் குமார் என்பவருடன் சேர்ந்து இரயில்வே தண்டவாளத்தில் நின்றபடி டிக்டாக் மற்றும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் வீடியோக்கள் பதிவு செய்வது வழக்கம்

தங்களது கெத்தை காட்டுவதற்காக தண்டவாளத்தில் நின்று விதவிதமாக இன்ஸ்டா ரீல்ஸ்களை பதிவிட்டு வந்த நண்பர்கள் 3 பேரும், தண்டவாளத்தில் நின்றபடி விபரீதமாக பொழுதை கழிப்பதை தொடர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல 3 பேரும் தண்டவாளத்தில் நின்று விளையாடிக் கொண்டு ரயில் வருவதுகூட தெரியாமல் வீடியோ பதிவு செய்தனர். அப்போது சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார இரயில் ஒன்று அதிவேகத்தில் அவர்கள் மீது மோதியது, ரெயில் வந்த வேகத்தில் மூவரும் துண்டு துண்டாக உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு இரயில்வே போலீசார் சிதறிக்கிடந்த 3 பேரின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு விபரீதமான இந்த சோக சம்பவத்தால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments