வளையல் கடை நடத்தி வந்த பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டி தாக்குதல் -அதிமுக பெண் நிர்வாகி கைது

0 2094

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமுல் கேட்டு மிரட்டி பெண்ணை தாக்கிய அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் வளையல் கடை நடத்தி வருபவர் சித்ரா, இவரது கடைக்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிர் அணி நகர இணை செயலளர் திலகவதி, 50 ஆயிரம் ரூபாய் மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தரவில்லை என்றால் கடையை அகற்ற சொல்லி மிரட்டிய திலகவதி, சித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்தும், கீழே தள்ளிவிட்டு அடித்தும் தாக்கியுள்ளதாக, சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் திலகவதியை கைது செய்த போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments