சேமியா உப்புமாவில் எலிமருந்து... 1 1/2 வயது குழந்தை கொலை... காமுகி கார்த்திகா கைது ..!

0 2167
சேமியா உப்புமாவில் எலிமருந்து... 1 1/2 வயது குழந்தை கொலை... காமுகி கார்த்திகா கைது ..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதலனை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில்,  சேமியா உப்புமாவில் எலிமருந்தை கலந்து கொடுத்து தனது ஒன்றரை வயது ஆண் குழந்தை கொலை செய்து விட்டு  நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3அரை வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது.

இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலிக்காக வைத்த விஷப்பவுடரை சாப்பிட்டு மயக்கமடைந்து விட்டதாக, வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார் கார்த்திகா.

இதையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ,அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் , வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும் குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கார்த்திகாவின் செல்போனிற்கு வந்த மற்றும் சென்ற அழைப்புகள் சில அழிக்கபட்டிருந்ததால் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்திகாவின் செல் போனிற்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது .

இதில் குழந்தை எலிமருந்து சாப்பிட்டதாக கூறப்படும் நேரத்துக்கு முன்பாகவும், அதன் பின்னரும், கணவர் வேலைக்கு சென்ற நேரத்திலும் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கார்திகாவிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் கார்த்திகாவின் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்க செல்போன் மூலம் அணிலாக நுழைந்த காதலன் சுனில் போலீஸ் பிடியில் சிக்கினான். இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கான அதிர்ச்சி பின்னணி அம்பலமானது.

21 வயதான கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியாமல், இளம்பெண் என்று நினைத்து அவர் மீது காதல் கொண்டு நெருங்கி பழகிய சுனில் , அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரியவந்ததும் பேசுவதை நிறுத்தியுள்ளான்.

காதலில் மூழ்கி கிடந்த காமுகி கார்த்திகா, திருமணமானதை மறைத்தாலும், தனது இரண்டு குழந்தைகளையும் எப்படி மறைப்பது என்று தெரியாமல் குழம்பி உள்ளார். இரு குழந்தைகளையும் கொன்று விட்டால், தன்னை சிங்கிள் என நம்பி சுனில் ஏற்றுகொள்வான் என நினைத்து இரு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக கடந்த சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக கணவனிடம் கூறி வந்த கார்த்திகா, கணவர் வாங்கி வந்த பாலிடா என்ற எலிக்கொல்லி மருந்து பொடியை வீட்டை சுற்றி தூவி வந்துள்ளார். அதை ஊர்மக்கள் பார்வைக்கு படும் படி நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்பு மாவில் எலிமருந்தை கலந்து கொடுத்துள்ளார். மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிடதால் உடனடியாக பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் சிறு குழந்தை என்பதால் அதன் வாயில் விஷம் கலந்த உப்புமாவை அதிகமாக ஊட்டிவிட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய காமுகி கார்த்திகா கைது செய்யப்பட்டதாக கூறும் காவல்துறையினர், மூத்த பெண் குழந்தை, சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவ மனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலும் காமமும் கண்ணை மறைத்ததால் புதுகாதலனுக்காக பெற்ற குழந்தையை கொன்ற வழக்கில் கார்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments