நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

0 997
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 9 பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 ரயில்வே மேம்பாலங்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு உயர்மட்ட மேம்பாலமும், மதுரை மாவட்டத்தில் ஒரு பல்வழிச்சாலை மேம்பாலமும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு ரயில்வே கீழ்ப்பாலமும் கட்டி முடிக்கப்பட்டன.

மொத்தமாக சுமார் 310 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த 9 பாலங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments