உலக நலவாழ்வு நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

உலக நலவாழ்வு நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியுள்ளதுடன், மாநில மொழிகளில் மருத்துவப் படிப்பை வழங்க அரசு முயற்சி எடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக நலவாழ்வு நாளையொட்டி அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், அனைவரும் நலம்பெற வாழ்த்தியுள்ளார்.
உலக மக்களைக் காக்கும் மருத்துவத் துறைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் மருந்தகம் தொடங்கி ஏழைகளுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்துள்ளதாகவும், அனைவரின் நலவாழ்வை மேம்படுத்தப் பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments