மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் - உயர்நீதிமன்றம்

0 6916

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதை எதிர்த்துத் தனியார் பள்ளி மாணவர்களும், தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அரசு உதவி பெறும் பள்ளிகளும் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.

இந்த இட ஒதுக்கீட்டை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments