பள்ளி மாணவியை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய இருவர் கைது

சென்னை ஆயிரம் விளக்கில் பள்ளி மாணவியை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் பள்ளி முன் நின்ற 10ஆம் வகுப்பு மாணவியிடம், தானும் உன் தாயும் ஒன்றாக படித்தவர்கள் என ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
10 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வரச் சொல்லி அரும்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் கும்பல் அலைக்கழித்ததாகவும், வடபழனி நூறு அடி சாலையில் உள்ள ஒரு கடையில் இறுதியாக பணத்தை ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது.
இறுதியில் கடையில் இருந்து பணத்தை பெற வந்த மோஷினா பர்வீன் என்பவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த இஜாஸ் அகமது என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments