என் ‘பீர்’ என்னுரிமை.. கூலிங் இல்லைன்னா பாட்டிலை உடைப்போம்.. குடிகார புள்ளீங்கோஸ் சிக்கியது.!

0 1721

புதுச்சேரியில் மதுக்கடை ஒன்றில் பீர் வாங்கச்சென்ற இளைஞர்கள், பீர் குளிர்ச்சியாக இல்லை என்ற ஆத்திரத்தில் பாட்டிலை உடைத்து ரகளை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு மது வாங்க வந்த 3 இளைஞர்கள் வரிசையில் நிற்க பொறுமையில்லாமல், மதுவாங்க வந்த முதியவர்களின் வம்பிழுத்து தாக்கி விரட்டினர்.

ஒரு வழியாக கடையின் ஊழியரிடம் பணத்தை கொடுத்து பீர் கேட்டபோது, கடை ஊழியர் 2 பீர் பாட்டிலை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது பீர் பாட்டிலை தொட்டுப்பார்த்தவுடன் டென்சனான அந்த இளைஞர், பீர் கூலிங்காக இல்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலை தூக்கி அடித்து உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

அவர்களை பிடிக்க வந்தவர்களை கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து கத்தியை காண்பித்து அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர் .இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கடையின் ஊழியர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதுபானக்கடையில் பொருத்தப்பட்டு இருந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது ரகளையில் ஈடுபட்ட அந்த அடாவடி புள்ளிங்கோக்களை தேடினர்.

கூலிங் பீருக்காக அட்ராசிட்டி செய்த 3 பேரும் ஜய்யங்குட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி , தருமாபுரி மணிகண்டன், மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பகல் நேர வெயிலால் உண்டான சூட்டால் ஏற்பட்ட டென்சனை குறைக்க பீர் வாங்க சென்று, கூலிங் இல்லாத பீரால், டென்சனாகி பீர் பாட்டிலை உடைத்து வழக்கில் சிக்கிய 3 குடிகார புள்ளிங்கோக்களும் தற்போது கம்பி எண்ணி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments