மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

0 6546

JEE மெயின் தேர்வுகளை ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு மாற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட JEE தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி 29ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 21 தொடங்கி 30 வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

முதற்கட்ட JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்த நிலையில், விரைவில் 2ஆம் கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடப்பு கொள்ளுமாறு முகமை தெரிவித்துள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments