சென்னை : சாலையில் சென்ற பெண்ணை தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையன் கைது.!

0 2175

சென்னை அண்ணாநகரில் சாலையில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை அண்ணா நகர் டி பிளாக் பகுதியில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், கண்ணிமைக்கும் நொடியில் தாக்கி கீழே தள்ளிவிட்டு சங்கிலியை பறித்துச் சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றும் பைக்கில் பறந்த இருவரையும் சிசிடிவி மூலம் போலீசார் தேடி வந்தனர். வாகன பதிவு எண்ணை கொண்டு திருவள்ளூர் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரை கைது செய்ததாகவும், தலைமறைவான மற்றொருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments