விழுப்புரத்தில் மின்கசிவு காரணமாக தேங்காய் நார் பஞ்சு மில் முழுவதும் எரிந்து நாசம்.!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மின்கசிவு காரணமாக தேங்காய் நார் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மண்டவாய் பகுதியை சேர்ந்த சோமசேகரன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் பஞ்சு மில்லில், மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
கொளுந்து விட்டு எரிந்த தீயை ஊழியர்கள் அணைக்க முற்பட்டபோது தீ மளமளவென மில் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Comments