அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை இழிவு படுத்தினால் நடவடிக்கை - நடிகர் விஜய் எச்சரிக்கை

0 5392

அரசு அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிடும் உறுப்பினர்களை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி, சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை இழிவு படுத்தும் வகையில் போஸ்டர், மீம்ஸ்கள் உறுப்பினர்கள் வெளியிடக்கூடாது என்றும், மீறுவோர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments