அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் வாழ்த்து

0 2509
அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் வாழ்த்து

அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணிக்கு, சட்டப்பேரவையில் ரோஜாபூக்களை கொடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, தனது பேச்சின் இறுதியில் அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் அம்மா கிளினிக் ஆகியவை தொடர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத 15க்கும் மேற்பட்ட அதிமுக, எம்எல்ஏக்கள் ,பேசி முடித்ததும் விஜயதாரணிக்கு பாராட்டுக்களை தெரிவித்து, நீர்வளத்துறை சார்பாக வழங்கப்பட்ட ரோஜாப்பூவை வழங்கி வாழ்த்து கூறினர்.

இதனைப் பார்த்த அமைச்சர் துரைமுருகன், ஆர்டர் ஆர்டர் என்று கூறி அனைவரையும் இருக்கையில் அமரச்சொல்லியதை அடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments