காவலர்களை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் செயல் ஏற்கத்தக்கதல்ல - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

0 1411
காவலர்களை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் செயல் ஏற்கத்தக்கதல்ல - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னையில் பணியில் இருந்த காவலர்களை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் செயல் ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை 51 ஆவது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் காவலர்களை மிரட்டியதாக  வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி ஜெகதீசன் உள்ளிட்ட 4 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments