சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ’வெஸ்பா’ இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற அரசு ஊழியர் கைது

0 1161
சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ’வெஸ்பா’ இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற அரசு ஊழியர் கைது

புதுச்சேரியில், சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ’வெஸ்பா’ இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபரை சிசிடிவிக் காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

பாரதி வீதியில் பீட்சா கடை நடத்தி வரும் சக்திவேல் நேற்று மதியம் அவரது புதிய வெஸ்பா இருச்சக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது வாகனம் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் உள்ள சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், முதியவர் ஒருவர் நோட்டமிட்டப்படி சாவியுடன் நின்ற பைக்கை திருடிச்சென்றது பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு அரசு ஊழியர் ஸ்டாலினை கைது செய்த போலீசார் திருடப்பட்ட ’வெஸ்பா’ இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments