2 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து எடுத்து வந்த ரவுடி.. ஜாமீனில் வெளி வந்த ரவுடி மீண்டும் கைது

2 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து எடுத்து வந்த ரவுடி.. ஜாமீனில் வெளி வந்த ரவுடி மீண்டும் கைது
புதுச்சேரியில் வெடிகுண்டுடன் சுற்றித்திரிந்த ரவுடியை கைது செய்த போலீசார் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ரவுடி சுமன் மீது 4 கொலை, 5 கொலை முயற்சி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், செல்போன் கடை உரிமையாளரை கடத்திய வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சேதராபட்டு பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் அவ்வழியாக பைக்கில் வந்த சுமனிடம் சோதனை மேற்கொண்டனர். அதில், அரிசி பைகளில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments