பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

0 1626
பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான அனில் தேஷ்முக்கை இலஞ்ச ஊழல் வழக்கில் விசாரணைக்காக சிபிஐ காவலில் எடுத்துள்ளது.

இதேபோல் தாவூத் இப்ராகிம் தொடர்பான பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிந்த வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் ஏப்ரல் 18ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவசேனாவின் சஞ்சய் ராவத்துக்குச் சொந்தமான 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் சரத் பவார் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments