குடும்பப் பிரச்சனையில் மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த மருமகன், மனைவியையும் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்

0 793

மதுரை அருகே குடும்பப் பிரச்சனையில் மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த மருமகன், மனைவியையும் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி - ஜெயா தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 5 மாதங்களுக்கு முன் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பான செலவுகளுக்காக ஜெயாவின் 15 சவரன் நகைகளை அவரது தாய் காளியம்மாள் பெயரில் அடகு வைத்துள்ளார் முனியாண்டி.

இந்த நிலையில் தம்பதிக்கிடையே வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் ஜெயா நெடுமதுரையிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து நகையை மீட்க பணம் தருமாறு மருமகன் முனியாண்டியிடம் காளியம்மாள் கேட்டுள்ளார்.

முனியாண்டி பணம் தர மறுக்கவே, போலீசில் புகாரளித்துள்ளார் ஜெயா. இதனால் ஆத்திரத்தில் இருந்த முனியாண்டி நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் காளியம்மாளை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுள்ளார். தடுக்க வந்த மனைவி ஜெயாவின் கால் மற்றும் கைகளையும் வெட்டிவிட்டுத் தப்பிய முனியாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments