அடுத்த 2 மாதங்களில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

0 933
அடுத்த 2 மாதங்களில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அடுத்த 2 மாதங்களில் ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தரப்படும் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், இதுவரை ஐந்து இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 65 ஆயிரம் பேருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டமாகத் தஞ்சாவூர், மதுரை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments