இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை..!

0 6851

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்த மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் பேரம் பேசி லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2017-ல் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில், கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞரான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் கோபிநாத்தை செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டெல்லி வருமாறு கூறியதாகவும், இதனால் மன வேதனையில் இருந்த கோபிநாத் தனது வீட்டின் எதிரே இருந்த குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருகிற 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments