சென்னையில் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டம்.. அடையாற்றைச் சீரமைக்க 180 கோடி ரூபாயில் விரிவான மதிப்பீடு

சென்னையில் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டம்.. அடையாற்றைச் சீரமைக்க 180 கோடி ரூபாயில் விரிவான மதிப்பீடு
சென்னை நீர் வழங்கல் அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அடையாற்றைச் சீரமைக்க 8 பணிகளுக்கு 180 கோடி ரூபாயில் விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
திட்டத்தில் உயர்மட்டக் கால்வாயில் தானியங்கி நீர்ப்பாசனத் திட்டத்தை 60 கோடி ரூபாய் மதிப்பில் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நீர் வளத்துறை மணல் கிடங்குகளில் ஆற்று மணல் விற்பனையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Comments