பூஜையுடன் தொடங்கியது நடிகர் விஜய்யின் 66வது திரைப்படத்தின் படப்பிடிப்பு..!

0 5324

நடிகர் விஜய்யின் 66வது திரைப்படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் விஜய்யின் 65-ஆவது திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயும் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் தமன் படத்திற்கு இசையமைக்கிறார் . ஒரு பாடல் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments