சீனாவின் யிபின் நகரில் மிதமான நிலநடுக்கம்.. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக குலுங்கிய காட்சிகள் வெளியாகின

0 713
சீனாவின் யிபின் நகரில் மிதமான நிலநடுக்கம்.. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இலேசாக குலுங்கிய காட்சிகள் வெளியாகின

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 5 புள்ளி 1 ஆக பதிவாகி உள்ளது. யிபின் நகரில் உள்ள சிங்வென் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் பல கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் சாலையோரங்களில் கடைகளை வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும், ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்ட காட்சியும் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments