நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்தது.. ஆம்புலன்ஸில் இருந்தவர்களை உடனடியாக இறக்கி விட்ட ஓட்டுநர்

0 973
ஆம்புலன்ஸில் இருந்தவர்களை உடனடியாக இறக்கி விட்ட ஓட்டுநர்

சென்னையில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 78 வயது முதியவரை, அவரது மருமகன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கீழ்பாக்கம் புதிய ஆவடி சாலையை ஆம்புலன்ஸ் கடந்த போது எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக ஆம்புலன்ஸை நிறுத்தி உள்ளே இறந்தவர்களை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதற்கிடையே ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்துவதற்குள் முழு ஆம்புலன்ஸும் எரிந்து சேதமடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments