பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் உடன் ஊர் சுற்றியதால், ஆத்திரத்தில் மகளின் வாயில் பூச்சி மருந்து ஊற்றிய தந்தை..!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் உடன் ஊர் சுற்றியதாக மகளின் வாயில் தந்தையே பூச்சி மருந்து ஊற்றியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாவலூர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் - ஆண்டாள் தம்பதியின் மகள் அர்ச்சனா, சோமமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக அவர் பள்ளிக்கு செல்லாமல் அதேப் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அர்ஜூனன், அர்ச்சனாவை சரமாரியாக அடித்ததுடன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை அவரது வாயில் ஊற்றியதாக சொல்லப்படுகிறது.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அர்ச்சனா செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள மணிமங்கலம் போலீசார்அர்ஜுனனிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Comments