திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து.!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் காவாலியிருந்து, குழந்தையின் சிகிச்சைக்காக சென்னை வந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் காரில் ஊருக்குப் புறப்பட்டனர்.
எளாவூர் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பு சுவரின் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அருகில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments