வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை நேரில் சென்று நலம் விசாரித்த தமிழக டிஜிபி

0 2597

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்த முற்பட்டார். அந்த ஆட்டோ பொன்ராஜ் மீது மோதி தூக்கிவீசிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த பொன்ராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில், அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திர பாபு, காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்து தரும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments