ஏழைகள் நலனுக்குப் பாடுபடும் கட்சி பாஜக - அமித் ஷா

0 4720

ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக தொடங்கப்பட்டு 42ஆண்டு நிறைவையொட்டி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுக்குத் தொண்டாற்றுவதுடன் ஏழைகள், உழவர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோரின் ஆசைகளை நிறைவேற்ற பாஜக பாடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு வீடு, மின்சாரம், எரிவாயு, கழிப்பறை, வங்கிக் கணக்கு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வழங்க பாஜக அரசு பாடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் தலைமையில் மக்கள்நலன், நாட்டின் முன்னேற்றம் ஆகிய பாதையில் பாஜக நடைபோட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments