திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்.!

0 4586

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் நேற்று காலமானர்.

அல்லிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்கிற லிட்டில் ஜான் என்பவர் ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

சுமார் 3 அடி உயரம் கொண்ட இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும், கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர்.

மோடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வீட்டில் உறங்கியவர் மீண்டும் காலையில் எழுந்திருக்கவில்லை. மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments