மூலப்பொருட்கள் விலை உயர்வு - தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடல்.!

0 1028

மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூடி, உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் முழு நேர, பகுதி நேர ஆலைகள் மற்றும் பேக்கிங் தொழிற்சாலைகள் என அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

தீப்பெட்டி பண்டல்களும் விற்பனைக்கு கொண்டு செல்லபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 30 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments