டிவிட்டரின் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ள எலன் மஸ்க்.!

0 1043

டிவிட்டர் நிறுவனத்தின் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய 9 புள்ளி 2 சதவீதப் பங்குகளை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன் மஸ்க் வாங்கிய நிலையில், அவரை தமது இயக்குநர் குழு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

எலன் மஸ்க்கை இயக்குநர் குழுவில் உறுப்பினராக நியமிப்பதில் மகிழ்ச்சியடைவதாக டிவிட்டர் தலைமைச் செயல்அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிகளவில் முதலீடு செய்பவராகவும் டிவிட்டரைப் பயன்படுத்தி 8 கோடி பேரை பின்தொடர்பவராக பெற்றவருமான எலன் மஸ்க் டிவிட்டரின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டரின் நிர்வாகத்தில் இணைந்ததன் முதல் நடவடிக்கையாக உங்கள் டிவிட்களுக்கு எடிட் பட்டன் தேவையா என்று கேள்வியை எழுப்பி கருத்துக்கணிப்பை நடத்தினார் எலன் மஸ்க். இதற்கு 44 லட்சத்துக்கும் அதிகமானோர் பதில் அளித்துள்ளனர். இதில் பெரும்பாலோர் ஆம் என்று தெரிவித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments