உக்ரைன் நகரில் மனிதாபிமான உதவிகள் பெற நீண்ட வரிசையில் நிற்கும் மக்களின் டிரோன் காட்சிகள்

0 1336

உக்ரைன் நாட்டின் Mariupol நகரில் மனிதாபிமான உதவிகள் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு 4லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் உள்ளது.

அங்கு வசிக்கும் மக்கள் உணவு, இருப்பிடம், குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியுமின்றி அல்லல்பட்டு வருகின்றனர். அந்த நகரில் இருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் வழிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நடந்து சென்றால் மட்டுமே அந்நகரில் இருந்து வெளியேறும் நிலைமை உள்ளதாக உக்ரைன் துணைப்பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments