சென்னையில் மெட்ரோ ரயில் பணி: நிலம் கையகப்படுத்துவதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.!

0 627

சென்னை பெரம்பூர் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில், நிலம் கையகப்படுத்துவதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓட்டேரி முரசொலி மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராஜிவ் காந்தி நகர், சேமாத்தம்மன் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் நிலம் கையகப்படுத்துவதற்காக ரயில்வே துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள், அப்பகுதி மக்களுடன் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சந்திரயோகி சமாதி சாலை மற்றும் முரசொலி மேம்பாலம் அருகே 2 பிரிவுகளாக பிரிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments