முடியை பிடித்த சுடிதார் ராணிகள்.. அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி..!
சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவிகள் தலைமுடியை பிடித்துக் கொண்டு சாலையில் சண்டையிட்ட பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மை கல்லூரி மாணவிகள் சிலர் பேருந்து நிறுத்தத்தின் நின்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்
மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு கடுமையாக சண்டையிட்டுக்கொள்ள அதனை சில இளைஞர்கள் உற்சாகமாக வீடியோ எடுத்துக் கொண்டே ஒன்ஸ் மோர் கேட்டனர்
கையில் சிக்கிய முடியை எடுக்க முடியாமல் சுடிதார் ராணிகள் இருவரும் தினறிக்கொண்டு இருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு மாணவி களமிறங்க அவரை மற்றொருவர் அடித்து விரட்டிய சம்பவமும் அரங்கேறியது
சாலையில் தாக்கிக் கொண்ட சுடிதார் சூறாவளிகளை சில மாணவ மாணவிகள் சமாதானப்படுத்தி பிரித்து விட்ட நிலையில், காதல் விவகாரத்தால் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளையும் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர்.
வழக்கமாக பள்ளி மாணவர்கள் சாலைகளில் கையால் வீடு கட்டி சக மாணவர்களுடன் கலாட்டாவில் ஈடுபடுவது வழக்கம் இப்போது அவர்களுக்கு போட்டியாக பெண்புள்ளீங்கோக்களும் களமிறங்கி இருப்பது வேதனைக்குறியது.
Comments