ருமேனியா நாட்டு கடற்பரப்பில் மிதந்த கண்ணிவெடியை செயலிழக்கச் செய்த கடற்படையினர்..

0 1801
ருமேனியா நாட்டு கடற்பரப்பில் மிதந்த கண்ணிவெடியை கடற்படையினர் செயலிழக்கச் செய்தனர்.

ருமேனியா நாட்டு கடற்பரப்பில் மிதந்த கண்ணிவெடியை கடற்படையினர் செயலிழக்கச் செய்தனர்.

ரஷ்ய போர் கப்பல்களைத் தகர்ப்பதற்காக, உக்ரைன் ராணுவத்தினரால் கருங்கடலில் மிதக்கவிடப்பட்ட கண்ணி வெடி கடல் அலைகளால் ருமேனியா நோக்கி அடித்து வரப்பட்டது.

கரையில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் மிதந்த கண்ணி வெடியை கவனித்த மீனவர் ஒருவர் ருமேனிய கடற்படையினருக்குத் தகவல் அளித்தார்.

அதனை அவர்கள் கடலிலேயே வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்தனர். இதே போல் துருக்கி நாட்டு கடற்பரப்பில் மிதந்த 2 கண்ணிவெடிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments