முன் பகை காரணமாக ஹோட்டல் உரிமையாளர் மீது ரவுடி கும்பல் சரமாரி தாக்குதல்..

0 1382
தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் முன் பகை காரணமாக சிறிய ஹோட்டல் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தி ரவுடி கும்பல் ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் முன் பகை காரணமாக சிறிய ஹோட்டல் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் பட்டப்பகலில் தாக்குதல் நடத்தி ரவுடி கும்பல் ஒன்று  அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

நிஜமாபாத்தின் ஆட்டோ நகரில் உள்ள ரஜாக் என்ற அந்த ஹோட்டல் மீது ரவுடி கும்பல் பெரிய கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வந்த டீ மாஸ்டரையும் , ஹோட்டல் உரிமையாளரையும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரும் அவரது நண்பர்களும் ரவுடி கும்பல் மீது எதிர் தாக்குதல் நடத்தினர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் அந்த ரவுடி கும்பல் தப்பித்து ஓடிய நிலையில், தாக்குதலை நடத்தியது இப்து என்ற பிரபல ரவுடியும் அவனது கூட்டாளிகளும் என தெரியவந்தது. தப்பியோடிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments