நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. நாளை மாலை ஓய்கிறது பிரச்சாரம்.!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுவதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், கடம்பூர் பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வரும்19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட வாரியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனர்
அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். எட்டுமுனைப் போட்டி நிலவுவதால் வீதிகள் எங்கும் பிரச்சாரத்தால் களைகட்டியுள்ளது.
நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதால் பொதுமக்களை சந்திப்பதில் வேட்பாளர்கள், தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சார நேரம் முடிந்தபின் வார்டுகளுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்தந்த வார்டுகளை விட்டு வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Comments