ஜப்பானில் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.!

0 1832

ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த தொழிற்சாலையில் நள்ளிரவில் தீடீரென தீப்பற்றிய நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், 4 பெண்கள் உட்பட 5 பேரை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர், சுமார் 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். 

Sanko Seika என்னும் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments