இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்துக்காக புறப்பட்ட இந்திய அணி

0 276

இங்கிலாந்தில் சுற்றுப் பயணத்துக்காக இந்திய அணி புறப்பட்ட போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் 3 டி20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5  டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி 20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. விராட்கோலி தனது கழுத்து காயம் குணமடைந்து விட்டதாகத் தெரிவித்துள்ள நிலையில் முழு ஓய்வுக்குப் பிறகு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இந்திய அணி புறப்பட்டுச் சென்றது.

விமான நிலையத்தில் ஒரு சிறுமியின் வேண்டுகோளுக்கிணங்க அந்தச் சிறுமியுடன் கோலி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் உற்சாகத்துடனுடம் நகைச்சுவை உணர்வுடனும், அணி வீரர்கள் உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments