புதுக்கோட்டையில் அரசு பழைய மருத்துவமனையில் தங்கியிருந்த மூதாட்டி கொலை - இருவர் கைது
புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனையில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போதை ஆசாமிகள் 2 பேர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருந்த நிலையில், சம்பவத்தன்று ஓய்வறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பகல் நேரத்தில் மட்டும் ஆள் நடமாட்டம் இருக்கும் அரசு பழைய மருத்துவமனைக்கு, இரவு நேரத்தில் குடிபோதையில் வந்த ஜீவானந்தம் என்பவனும், வீரராசு என்பவனும் அங்கிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அடித்துக் கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகிக்கும் படியாக சுற்றித்திரிந்thaத இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இருவர் மீதும் ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
Comments