பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்.!
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட 35 யூடியூப் சேனல்கள், 2 இணையதளங்கள்,சமூக வலைதள கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இது குறித்து பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விக்ரம், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் சில யூடியூப் சேனல்கள் இந்தியாவிற்கு எதிராக பொய்பிரச்சாரம் மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதனை அடுத்து, பாகிஸ்தானை சேர்ந்த சில யூடியூப் சேனல்கள், 2 ட்விட்டர், 2 இஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பரில் பாகிஸ்தானில் இருந்து இயங்கிய 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments