ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

0 13331

18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் எழுந்த கருத்து வேறுபாடுகளால், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக, நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்க அவரது குடும்ப வாழ்வில் விழுந்த விரிசல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

2002 ஆம் ஆண்டு தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, 2004ல் தன்னை விட 2 வயது மூத்த ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்ததால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டு மாப்பிள்ளை என்ற அந்தஸ்தைப் பிடித்தவர் தனுஷ்..!

திருமணத்திற்கு பின்னர் தனுஷின் படங்கள் சரியாக போகாத நிலையில், ரஜினி நடித்த படத்தின் பெயரை தாங்கிய பொல்லாதவன், படிக்காதவன் போன்ற படங்கள் தனுஷிற்கு தமிழ் திரை உலகில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து திரைப்படத் தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என்று தனுஷ் திரை உலகில் கொடி கட்டிப் பறக்க அவரது மனைவி ஐஸ்வர்யாவின் ஒத்துழைப்பும், சகிப்புத்தன்மையும் முக்கிய காரணமாக அமைந்தது.

நாயகிகள் சிலருடன் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி திரை உலகில் சர்ச்சையை கிளப்பியது. அவருடன் நடித்த சில நடிகைகளும், பாடகர் ஒருவரின் மனைவியும் தங்கள் கணவன்மார்களைப் பிரிந்து தற்போது தனித்து வசித்து வருகின்றனர்.

பாட்டு எழுதுவதாக கூறி அடிக்கடி தனி வீட்டில் வசிப்பதை தனுஷ் வாடிக்கையாக்கியதாகக் கூறப்படுகிறது. திரைப்பட இயக்கத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யாவோ, 3 படத்தில் தனுஷ் உடன் கை கோர்த்தது போல, வை ராஜா வை படத்தின் மூலம் கவுதம் கார்த்திக்கையும் ஹீரோவாக்கினார்..!

திரைத்துறையில் பயணித்த இந்த தம்பதிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த இரு மகன்கள் உள்ள நிலையில் தாங்கள் பிரிவதாக சமூக வலைதளக் கணக்குகள் மூலம் அறிவித்து ரஜினியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல தங்கள் இரு மகன்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்." என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் இந்த தகவலை பதிவிட்டு இனி நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று பதிவிட்டு சமந்தா- நாகசைதன்யா பாணியில் தனுஷ் உடனான திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ்திரை உலகில் தனது மனைவியை பிரிந்த பெரும்பாலான முன்னணி நடிகர்கள், திரைத்துறையில் குறுகிய காலத்தில் தங்கள் மார்க்கெட்டை இழந்து தவித்து வருவது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments