காளையை அடக்கிய வீரரை தாக்கியவர்களுக்கு போலீஸின் பொங்கல் கவனிப்பு.. விழுந்த அடியில் அப்படியே எஸ்கேப்.!

0 7447

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியி நடுவே மாடு பிடித்த வீரர்களுடன் மல்லுக்கட்டிய மாட்டின் உரிமையாளரையும் ,அவரது ஆதரவாளர்களையும் போலீசார் அடித்து விரட்டினர்..

ஜல்லிக்கட்டில் மாடுகள் பிடிபடுவதும், பிடிபடாமல் தப்பிச்செல்வதும் வழக்கமான நிகழ்வு என்றாலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளைகளை அடக்குவதில் வீரர்கள் தீவிரம் காட்டிய நிலையில் பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்கள் சிலர் ஆத்திரத்தில் வீரர்களை தாக்கிய நிகழ்வுகள் அரங்கேறியது

ஒரு மாட்டின் உரிமையாளர் தனது மாட்டை பிடித்த வீரரை தலையில் தாக்கிச்சென்ற நிலையில் மற்றொடு மாட்டின் உரிமையாளரும், அவருடைய ஆதரவாளர்களும் சேர்ந்து வீரரை தாக்க பதிலுக்கு வீரர்கள் அவர்களை தாக்க தொடங்கினர்

இரு தரப்பும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டே ஓடிச்செல்ல அங்கு பாதுகாப்புக்கு கையில் லத்தியுடன் நின்ற போலீசார், ரகளையில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்தவர்களையும் விரட்டி விரட்டி தாக்கினர்

பொங்கள் பரிசாக விழுந்த அடியில் அப்படியே தடுப்புகளை தாண்டி விழுந்து விட்டால் போதும் என்று அப்படியே தப்பி ஓடினர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற தங்கள் காளைகள் பிடி மாடு என்ற அவமானத்துடன் வெளியேறியதை தாங்கிக் கொள்ள இயலாமல் மாட்டை பிடித்த வீரர்களை தாக்கியதாக கூறப்படுகின்றது.

இவ்வளவு களேபாரங்களுக்கும் நடுவில் ஒருவர் கூட இதனை ஒரு பிரச்சனையாக கூட எவரும் எடுத்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments