ஆற்றல் மிகு ராணுவம் அரிய காட்சிகள் வெளியீடு.!

0 4286

ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் பன்முக திறனை விளக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன...

நாடு சுதந்திரம் பெற்றதை அடுத்து 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் தளபதி பொறுப்பை இங்கிலாந்தின் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ஜெனரல் கே.எம்.கரியப்பா ஏற்றார்.

அதுவரை ஆங்கிலேயர் வசம் இருந்த தலைமை பொறுப்பு இந்தியர்கள் வசம் மாறியதை கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இந்திய தேசிய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

இதே போல இந்த ஆண்டு 73 வது ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்திய ராணுவம் தனது ஆற்றலை விளக்கும் குறும்படம் ஒன்றை நாட்டு மக்களுடன் பகிர்ந்துள்ளது. இந்த குறும் படம் வெறும் இரண்டு நிமிடம் 17 நொடிகளை மட்டுமே கொண்டதாக இருந்தாலும், தாயகம் காக்க ராணுவம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பதை துல்லியமாக காட்டுகிறது.

இலக்கை குறிவைக்கும் ராணுவ வீரர் ஒருவரையும், அவரது நவீன துப்பாக்கியை கொண்டு தொடங்கும் குறும்படத்தில் அடுத்தடுத்து விரியும் காட்சிகள், இந்திய ராணுவம் சர்வதேச தரத்தில் மிளர்வதை விளக்குகின்றன.

மண்ணோ, விண்ணோ, காடோ, மேடோ, ரோடோ எந்த இடத்திலும் தாக்கும் திறனில் அதி உயர் பயிற்சியை இந்திய ராணுவம் கொண்டுள்ளது என்பதை கண்ணுக்கு முன்னால் விரியும் ஒவ்வொரு காட்சியும் விளக்குகின்றன.

நீரிலும், நிலத்திலும், வானிலும், கடலிலும் எதிரி எங்கிருந்தாலும் உயிரையும் துச்சமாக மதித்து பாயும் ஆற்றலை ராணுவம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக்கி உள்ளது.
காலட்படை வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம் விரையும் படையினர்.

பீரங்கி மூலம் எதிரிகளை பந்தாடும் படைபிரிவு என பல்வேறு அங்கங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்று பட்டு, ஒருங்கிணைந்து தாக்குதல் தொடுக்கும் சாகச காட்சிகளை நாட்டு மக்களுடன் பகிர்ந்துள்ளது இந்திய ராணுவம்.

போருக்கு எந்த நொடியிலும் தயார் நிலை, உயிர் குடிக்கும் ஆயுதங்கள் கொண்ட படை, துல்லிய தாக்கு திறன் கொண்ட ஆயுதங்கள், மிக சீரிய தொழில் நுட்பம், எந்த மூலை முடுக்கையும் தொடர்பு கொள்ளும் தகவல் தொழில் நுட்பம், அரிய வகை செயற்கை நுண்ணறிவு, முக்கிய தொழில் நுட்பங்கள், எதிர்கால போருக்கும் தயார் நிலை என, ராணுவத்தின் சிறப்பை கூறும் அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments