தொடக்கநிலை தொழில் நிறுவனங்களே நாட்டின் முதுகெலும்பு..!

0 3027

இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடக்க நிலை தொழில் நிறுவன தேசிய நாளாக கொண்டாடப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை தொடக்க நிலை தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 தொடக்கநிலை தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக விளங்கப் போகின்றன என்றார். நாட்டின் 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், தொடக்க நிலை தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோர், சர்வதேச அளவில் நாட்டுக்கு பெருமை தேடி தருவதாக அவர் கூறினார். இந்த தசாப்தம், நாட்டின் தொழில்நுட்பத்தின் பத்தாண்டுகளாக இருக்குமென அவர் குறிப்பிட்டார். கண்டுபிடிப்புகளை வலிமை மிகுந்ததாக மாற்ற,தொழில் தொடங்குவதையும், தொடக்க நிலை தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிகைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments