சென்னையில் கொரோனா சோதனை செய்துகொள்வோருக்கு முடிவு வரும் முன்னரே மாநகராட்சி சார்பில் மாத்திரைகள் வழங்கப்படும் - மாநகராட்சி

0 12374

சென்னையில் கொரோனா சோதனை செய்துகொள்வோருக்கு முடிவு வரும் முன்னரே மாநகராட்சி சார்பில் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் கொரோனா சோதனை மையங்களில் சளி மாதிரி கொடுத்து முடிவுக்காக வீடுகளில் காத்திருப்போரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டும், தொற்றுப் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலும் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் வழங்கப்படும்.

இந்தத் தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடிநீர், மூன்றடுக்கு முகக்கவசங்கள் ஆகியன இருக்கும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆட்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் போன்ற நோய் எதிர்ப்பாற்றலுக்கான மாத்திரைகள் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments