பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 21 மாடுகளை பிடித்த பிரபாகரனுக்கு முதல் பரிசு.!

0 7064

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 21 காளைகளைப் பிடித்தவருக்கு மோட்டார் சைக்கிளும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்த 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் இறக்கப்பட்டனர்.

காளைகளின் குணத்தை நொடியில் எடை போட்டு, அதன் திமிலை பிடித்து தழுவிய வீரர்கள் வெற்றி கண்டனர். காளைகளை இனம் காணாமல் பிடிக்க பாய்ந்த சிலர் மண்ணில் உருண்டனர்.

சில வீரர்கள் வாடிவாசலை தாண்டும் காளைகளை அடுத்த நொடியில் மடக்கி பிடித்து தமிழர்களின் கொல்லேறு தழுவதலை அட்டகாசமாக வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து காளைகளை பிடித்து பலர் பரிசுகளை தட்டிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments